மன்னார்குடி அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 45 சவரன் நகைகள் கொள்ளை

 

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சுந்தரக் கோட்டையில் பட்டப் பகலில் பூட்டிக் கிடந்த அரசு பள்ளி ஆசிரியர் கரிகாலன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 45 பவுன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர். சம்பவ இடத்தில் எஸ்பி , டிஎஸ்பி நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். மகளின் திருமணத்துக்காக நகைகளை வாங்கி வைத்திருந்ததாக ஆசிரியர் கரிகாலன் தகவல் தெரிவித்துள்ளார். 45 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி, ரூ.22,000 ரொக்கத்தை கொள்ளையடித்தவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் .

Related Stories: