சென்னை: செங்கல்பட்டு – சென்னை கடற்கரை மின்சார ரயில் வழித்தடத்தில் சிக்னல் கோளாறு காரணமாக ஆங்காங்கே மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்னல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக தாம்பரத்தில் இருந்து செல்லக்கூடிய ரயில்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன.
செங்கல்பட்டு – சென்னை கடற்கரை மின்சார ரயில் வழித்தடத்தில் சிக்னல் கோளாறு காரணமாக கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு மேலாக பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் பகுதிகளில் மின்சார ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்திவைக்கப்பட்டன. இதனால் அலுவலகத்திற்கு, செல்லக்கூடிய பெரும்பாலான பயணிகள் மற்றும் பள்ளிகளுக்கு செல்லக்கூடிய மாணவர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
பிரதான வழித்தடமாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு – சென்னை கடற்கரை செல்லக்கூடிய இந்த வழித்தடத்தில் தினசரி 7 லட்சம் முதல் 8 லட்சம் வரை பயணிகள் இதில் பயணிக்கிறார்கள். அவ்வப்போது மின்சார ரயில்களை பொறுத்தவரை மேம்பாடுபணிகளுக்காக மற்றம் செய்யப்படும் ஆனால் தற்போது நெருக்கடியான நேரங்களில் எதிர்பார்க்காத நிலையில் இந்த சிகனால் கோளாறு ஏற்பட்டுள்ளதால் அதனை சரி செய்யக்கூடிய பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுவருகிறார்கள்.
