முதியவர் மீது தாக்குதல்

ராஜபாளையம், ஜூன் 4: ராஜபாளையம் மாப்பிள்ளை சுப்பையா தெருவை சேர்ந்தவர் ஜெயசந்திரன் (65). இவருக்கும், இவரது வீட்டின் அருகே உள்ள வேலுச்சாமி என்பவருக்கும் கடந்த சில நாட்களாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ஜெயச்சந்திரன் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த வேலுச்சாமி, அவரது மனைவி ராமலெட்சுமி, மகள் யாமினி, மகன் கார்த்திக், உறவினர் செல்வம் ஆகியோர் சேர்ந்து ஜெயச்சந்திரனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜபாலையம் தெற்கு காவல் நிலையத்தில் ஜெயச்சந்திரன் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: