நத்தம் அரசு கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கை ஜூன் 5, 8ல் நடக்கிறது

நத்தம், ஜூன் 4: நத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026- 2027ம் கல்வியாண்டிற்கான இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் வெள்ளிக்கிழமை (05.06.2026) அன்று சிறப்பு கலந்தாய்வும், திங்கட்கிழமை (08.06.2026) அன்று முதல் பொது கலந்தாய்வும் நடைபெற உள்ளது.

கல்லூரி வளாகத்தில் காலை 9 மணிக்கு கலந்தாய்வு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சேர்க்கைக்கு உள்ள பாடப்பிரிவுகள்: பி.ஏ. (வரவாறு), பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்.சி (கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ்) விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் மின்னஞ்சல் மற்றும் கட்செயலி (வாட்ஸ்அப்) வழியாக அழைப்பு கடிதம் அனுப்பப்படும் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: