- கேரளா
- சட்டமன்ற உறுப்பினர்
- சபாநாயகர்
- திருவனந்தபுரம்
- கேரள சட்டமன்றம்
- ஷானிமோல் உஸ்மான்
- காங்கிரஸ் கூட்டணி
- மோஹ்சின்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- இடது
திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் துணை சபாநாயகர் தேர்தல் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஷானிமோள் உஸ்மானும், இடதுசாரி கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மொஹ்சினும் போட்டியிட்டனர்.
இதில் ஷானிமோள் உஸ்மான் 99 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மொஹ்சினுக்கு 34 வாக்குகள் கிடைத்தன. பாஜவை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் ஓட்டு போடவில்லை. காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த 2 எம்எல்ஏக்களும், இடதுசாரி கூட்டணியை சேர்ந்த ஒரு எம்எல்ஏவும் சபைக்கு வராததால் வாக்களிக்கவில்லை.
ஷானிமோள் உஸ்மான் கேரள சட்டசபையில் 4வது பெண் துணை சபாநாயகர் ஆவார். 35 வருடங்களுக்குப் பின்னர் கேரள சட்டசபையில் துணை சபாநாயகராக ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
