×

கர்நாடக புதிய முதல்வராக டி.கே.சிவக்குமார் இன்று பதவியேற்பு: ராகுல்காந்தி, கார்கே உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் 25வது முதல்வராக டி.கே.சிவகுமார் இன்று பதவியேற்கிறார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக இருந்த சித்தராமையா கடந்த 28ம் தேதி ராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து புதிய முதல்வர் தேர்வு செய்ய வசதியாக கடந்த 30ம் தேதி பெங்களூரு விதானசவுதாவில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக டி.கே.சிவகுமார் பெயரை, சித்தராமையா முன் மொழிந்தார். அதை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக ஏற்று கொண்டனர். அதை தொடர்ந்து ஜூன் 3ம் தேதி ஆட்சி அமைக்க ஆளுநரை சந்தித்து டி.கே.சிவகுமார் உரிமைகோரினார்.

அதையேற்று கொண்ட ஆளுநர் ஆட்சி அமைக்க வரும்படி டி.கே.சிவகுமாருக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி பெங்களூரு மக்கள் பவனில் இன்று மாலை 4.05 மணிக்கு புதிய முதல்வர் பதவியேற்பு விழா நடக்கிறது. இதற்காக மக்கள் பவனில் உள்ள கண்ணாடி மாளிகையில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. புதிய அரசு பதவியேற்பு விழாவில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். டி.கே.சிவகுமாருடன் 20 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் விவரங்கள் வெளியாகவில்லை.

Tags : D.K. Shivakumar ,Karnataka ,Chief Minister ,Rahul Gandhi ,Kharge ,Bengaluru ,25th ,Chief Minister of ,Congress ,Siddaramaiah ,
× RELATED போலீசாரின் அத்துமீறலுக்கு...