நீச்சலும் அதன் பயன்களும்!

நன்றி குங்குமம் தோழி

*நீச்சல் தற்பாதுகாப்பு மட்டுமின்றி நல்ல உடற்பயிற்சியாகும். கோடை காலத்தில் குழந்தைகளின் நல்ல பொழுதுபோக்கு நீச்சல்தான். அதன் பயன்களை அறிவோம்.

*ஒரு மணி நேர நீச்சல் பயிற்சி நம் உடலில் இருந்து 800 கலோரிகளை எரிக்கிறது. உடல் எடை குறைகின்றன.

*வாரத்திற்கு 6 தடவையாவது நீச்சல் பயிற்சி செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது செய்ய வேண்டும்.

*நீச்சல் பயிற்சி பெறவுள்ள ஒரு மணி நேரம் முன்பு வரை எதுவும் சாப்பிடக் கூடாது.

*நீச்சலில் 10 நிமிடம் கை, கால்களை நீட்டி மடக்கும் பயிற்சியை செய்ய வேண்டும். அடுத்த 10 நிமிடம் மல்லாந்த நிலையில் படுக்கலாம். பின் கை, கால்களை அசைத்து நீட்ட வேண்டும்.
*கடலில் நீச்சல் பயிற்சியை மேற்கொள்ளக் கூடாது.

*நீங்கள் நீச்சல் பயிற்சி செய்யும் இடத்தில் தண்ணீர் அடிக்கடி மாற்றப்படுகின்றதா என்பதை கவனியுங்கள்.

*நீங்கள் பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் அவசர தேவைக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் அவசியம் இருக்க வேண்டும்.

*வலிப்பு நோய், இழுப்பு நோய், ஆஸ்துமா மற்றும் தோல் வியாதி மற்றும் சிறுநீரை அடக்க முடியாத பாதிப்பு உள்ளவர்கள் நீச்சல் பயிற்சியை மேற் கொள்ளக் கூடாது.

*இடுப்பளவு தண்ணீரில் உங்கள் கால்களை நீரினால் அழுத்தி பின்பக்கம் உள்ள கால்களை மடக்க வேண்டும். இது தொடைகளுக்கு நல்ல பயிற்சி.

*கழுத்தளவு தண்ணீரில் மல்லாந்து படுத்து கை, கால்களை நீட்டி மடக்க வேண்டும்.

*இந்தப் பயிற்சியினை மேற்கொள்ள ஆரோக்கியமான உடல் நலம் அமையும்.

தொகுப்பு: எஸ்.விமலா சடையப்பன், திண்டுக்கல்

Related Stories: