மும்பை: இந்திய நிறுவனங்களின் பங்கு விலை அடிப்படையிலான மொத்த சந்தை மதிப்பை தென்கொரியாவின் பங்குச்சந்தை விஞ்சியது. உலகளவில் நிறுவனங்களின் சந்தை மதிப்பைவிட தென்கொரியா அளவானது விஞ்சி இருக்கிறது.
தென்கொரிய நிறுவனங்களின் பங்கு விலை அடிப்படையிலான சந்தை மதிப்பு இவ்வாண்டில் மட்டும் 86% சதவீதம் உயர்ந்துள்ளது. சாம்சங் எலக்ட்ரானிக்ஸின் பங்குவிலை அதிகரிப்பால் அந்நிறுவன சந்தை மதிப்பு ரூ.95 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பங்குவிலை அடிப்படையிலான சந்தை மதிப்பு இவ்வாண்டில் மட்டும் 86%சதவீதம் உயர்ந்துள்ளது.
எஸ்கே ஹைநிஸ்க் நிறுவன பங்கு விலை அதிகரித்ததால் அதன் சந்தை மதிப்பும் உயர்ந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு, சிப் தயாரிப்பு காரணமாக நிறுவனங்களின் பங்கு விலை கணிசமாக உயர்வு சந்தித்துள்ளது.
தென்கொரிய நிறுவனங்களின் மதிப்பு உயர்ந்தததால் அந்நாட்டு மொத்த சந்தை மதிப்பு ரூ. 475 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. அந்நிய முதலீட்டு நிறுவனங்களும் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் கோடிக்கு பங்குகளை விற்றுவிட்டன. ஈரான் – அமெரிக்கா போர் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்துள்ள நிலையில்,தென்கொரிய பங்குச்சந்தை உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
