தங்கம் விலை 2 நாளில் பவுனுக்கு ரூ.1040 உயர்ந்தது

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 2 நாளில் பவுனுக்கு ரூ.1040 உயர்ந்தது. தங்கம், வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 26ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2240 வரை குறைந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை சற்று அதிகரித்தது. அதாவது கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,600க்கும், பவுனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 16,800க்கும் விற்பனையானது.

வெள்ளியும் கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, பார் வெள்ளி ரூ.2.90 லட்சத்துக்கும் விற்பனையானது. இந்நிலையில், 2வது நாளாக நேற்றும் தங்கம் விலை சற்று அதிகரித்தது. வாரத்தின் இறுதி நாளான நேற்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,630க்கும், பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 17,040க்கும் விற்றது. வெள்ளி விலையில் நேற்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290க்கும், பார் வெள்ளி ரூ.2.90 லட்சத்துக்கும் விற்பனையானது.

Related Stories: