டெல்லி: இந்தியாவின் மிகப்பெரும் கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி மே மாதத்தில் 2,42,688 கார்களை விற்று சாதனை படைத்துள்ளது. 2026 ஏப்ரலில் விற்பனை செய்த 2,39,646 கார்கள் என்ற சாதனையை மறு மாதமே மாருதி சுசூகி நிறுவனம் முறியடித்துள்ளது. 2025 மே மாதம் இந்தியாவில் 1,38,690ஆக இருந்த மாருதி கார்கள் விற்பனை; கடந்த மாதம் 39.5% அதிகரித்துள்ளது. 2026 மே மாதத்தில் மாருதி சுசூகி நிறுவனம் 41,914 கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
