×

குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 முதல்நிலை தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் வரும் 1ம் தேதி முதல் (திங்கள் முதல் வெள்ளி வரை) நடத்தப்பட உள்ளது.

சேர விரும்புவோர், ஆதார் அட்டையின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் சென்னை-32, கிண்டியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தை நேரடியாக அலுவலக வேலை நாட்களில் அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றார்கள். மேலும், விவரங்களுக்கு, decgcguindy@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்கள், இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன் பெறலாம்.

Tags : Chennai ,Rashmi Siddharth Jagade ,TNPSC ,Chennai District Employment and Career Guidance Center ,
× RELATED வால்பாறை அருகே பெண் சிறுத்தை உயிரிழப்பு