குஜராத்தில் 4 சிங்கக் குட்டிகள் உயிரிழப்பு: வைரஸ் தொற்று?

அகமதாபாத்: குஜராத்தின் காந்தி நகரில் முதல்வர் புபேந்திர படேல் தலைமையில் நேற்று முன்தினம் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வன மற்றும் சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலாளர் வினோத் ராவ் முதல்வரிடம் பகிர்ந்து கொண்ட விவரங்களை மேற்கோள்காட்டி ஒரு அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, கிர் வனப்பகுதியின் பல்வேறு இடங்களில் நான்கு சிங்கக்குட்டிகள் உயிரிழந்ததாகவும், வைரஸ் தொற்று அச்சுறுத்தல் சந்தேகத்தின் பேரில் 17 வயதான சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிர் வனப்பகுதியில் உள்ள 350க்கும் மேற்பட்ட சிங்கங்களுக்கு உண்ணி அகற்றுதல் மற்றும் பிற சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Stories: