ஆந்திராவின் கண்டலேறு அணையில் திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லை வந்தடைந்தது

 

ஊத்துக்கோட்டை: ஆந்திராவின் கண்டலேறு அணையில் திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை வந்தடைந்தது. சென்னை குடிநீர் தேவைக்காக தெலுங்கு-கங்கை திட்ட ஒப்பந்தப்படி தமிழ்நாட்டுக்கு கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டுள்ளது. தெலுங்கு-கங்கை திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் ஆந்திர அரசு 12 டிஎம்சி நீர் வழங்கி வருகிறது. கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட நீர் 152 கிலோ மீட்டர் பயணித்து ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டுக்கு வந்தது.

தமிழ்நாடு எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டுக்கு வினாடிக்கு 43 கனஅடி நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரியில் கிருஷ்ணா நதி நீர் தேக்கி வைக்கப்பட்டு சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது. 2 நாட்களுக்கு முன்பே தமிழகம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமதமாக வந்தடைந்தது. தமிழக எல்லையை வந்தடைந்த கிருஷ்ணா நதிநீர் இன்று இரவு பூண்டி ஏரியை சென்றடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.,

Related Stories: