திருமணம் செய்வதாக இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு 7 ஆண்டு சிறை மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு

விழுப்புரம்: கோட்டக்குப்பம் அருகே ஆசை வார்த்தைகள் கூறி பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.3 லட்சம் அபராதம் விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எம்.திருக்கனூரைச் சேர்ந்தவர்  ராஜீவ்காந்தி( 35). ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 2012ம் ஆண்டு  புதுக்குப்பத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன், ஆடு மேய்க்கச் சென்ற போது பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ராஜீவ்காந்தி, அந்த பெண்ணிடம் நெருங்கி பழகி உள்ளார். அப்போது, கர்ப்பமடைந்த இளம்பெண்ணுக்கு, ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால், ராஜீவ் காந்தி திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். பெற்றோரிடம் சென்று கேட்டபோதும், திருமணம் செய்யாமல் மிரட்டி அனுப்பியுள்ளார். இதுகுறித்து இளம்பெண் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ராஜீவ் காந்தி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சாந்தி, நேற்று தீர்ப்பு கூறினார். அதில், ராஜீவ்காந்திக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதம் விதித்தும் அதனை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் ராதிகா செந்தில் ஆஜரானார். சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராஜீவ் காந்தி, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.

Related Stories: