×

குவாலிபயர் 1ல் குஜராத் படுதோல்வி : பைனலில் பெங்களூரு

 

தர்மசாலா: ஐபிஎல் 19வது தொடரின் லீக் போட்டிகள் முடிந்த நிலையில் நேற்று குவாலிபயர் 1ல் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. ஆர்சிபியின் ஓபனர்களாக விராட் கோலி, வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். வந்த வேகத்தில் அதிரடி காட்டிய வெங்கடேஷ் ஐயர் 19 ரன்னில் ஆட்டமிழந்தார். விராட் கோலி 25 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 43 ரன்னிலும், தேவ்தத் படிக்கல்லும் 19 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஜேசன் ஹோல்டர் பந்தில் அடுத்தடுத்து நடையை கட்டினார்.

அடுத்து ேஜாடி சேர்ந்த கேப்டன் பட்டிதார், குருணல் பாண்டியா ரன் வேட்டையை தொடர்ந்தனர். 95 ரன்கள் இந்த ேஜாடி சேர்த்த நிலையில், குருணல் பாண்டியா 43 ரன்னில் (28 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டிம் டேவிட் 4 ரன் அவுட்டாக ஜித்தேஷ் சர்மாவும், பட்தாரும் அதிரடி காட்டினர். 20 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் குவித்தது. பட்டிதார் 93 ரன் (33 பந்து, 5 பவுண்டரி, 9 சிக்சர்) , ஜித்தேஷ் சர்மா 15 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் தரப்பில் ரபாடா, ஜேசன் ஜோல்டர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

255 ரன்கள் என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. துவக்க வீரர்கள் சாய் சுதர்சன் 14 ரன்னிலும், கேப்டன் கில் 2 ரன்னிலும் ஆட்டமிழக்க அடுத்து வந்த பட்லர் 29 ரன்னில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய வீரர்கள் ஒற்றை இலக்கில் வரிசையாக ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதிரடியாக விளையாடிய திவாட்டியா 68 ரன்னில் (36 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழந்தார். 19.3 ஓவரில் குஜராத் அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆர்சிபி அணி சார்பில் ஜேக்கப் டஃபி 3 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி பைனலுக்கு முன்னேறியது.

Tags : Gujarat ,Bengaluru ,Dharmasala ,Royal Challengers ,Bangalore ,Gujarat Titans ,IPL 19th series ,Virat ,RCP ,
× RELATED சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன்...