×

ஒலிம்பிக்கில் பங்கேற்க இருவருக்கு ரூ.5.80 லட்சம் நிதியுதவி: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வழங்கினார்

 

சென்னை: ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஆர்வமுடைய 2 பேருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5.80 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. இதுகுறித்து, பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று கூறியதாவது: விளையாட்டில் ஆர்வமுள்ள வீரர், வீராங்கனைகளை கண்டறிந்து விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் மூலம் அவர்களை சாதனையாளர்களாக மாற்றிட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் காதுக் கேட்கும் திறன் குறைந்தவர்களுக்கான ஒலிம்பிக்கில் பங்கேற்று தற்பொழுது எதிர்வரும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல ஆர்வமுடைய தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை சமீஹா பர்வீன் மற்றும் தேசிய அளவிலானப் போட்டிகளில் பங்கேற்ற நீச்சல் வீரர் அபிஷேக் ஆகியோர் நிதி உதவி கோரியிருந்தனர். அதன்படி, சமீஹா பர்வீனுக்கு ரூ. 3 லட்சமும், விளையாட்டு வீரர் அபிஷேக் ரூ. 2.80 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Minister ,Adhav Arjuna ,Olympics ,Chennai ,Tamil Nadu government ,Public Works ,Development ,
× RELATED கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி