×

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்; ஜோராக வென்ற ஜோகோவிச்: 2ம் சுற்றுக்கு முன்னேற்றம்

 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் நேற்று, செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் அபார வெற்றி பெற்று அடுத்து சுற்றுக்கு முன்னேறினார். பிரான்ஸின் பாரிஸ் நகரில், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டி ஒன்றில் செர்பியாவை சேர்ந்த உலகின் 4ம் நிலை வீரர் நோவக் ஜோகோவிச் (39), பிரான்ஸ் வீரர் கியோவனி எம்பெட்ஷி பெரிகார்ட் (22) உடன் மோதினார்.

இப்போட்டியின் முதல் செட்டில் துடிப்புடன் ஆடிய பெரிகார்ட், 7-5 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். அதன் பின் சுதாரித்து ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 2வது செட்டை 7-5 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். அதன் பின் நடந்த 2 செட்களையும், 6-1, 6-4 என்ற புள்ளிக் கணக்கில் ஜோகோவிச் கைப்பற்றினார். அதனால், 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

Tags : French Open Tennis ,Djokovic ,Paris ,Novak Djokovic ,French Open ,Paris, France ,Grand Slam ,
× RELATED கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி