×

டைபிரேக்கரில் வேகம் காட்டிய பிரக்ஞானந்தா, குகேஷ் வெற்றி

 

ஓஸ்லோ: நார்வே செஸ் தொடரில் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர்களான பிரக்ஞானந்தா, குகேஷ் ஆகியோர் அர்மகெடான் டை பிரேக்கரில் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர். ஓஸ்லோ நகரில் விறுவிறுப்பாக நடந்து வரும் நார்வே செஸ் தொடரின் முதல் சுற்றிலேயே பல பரபரப்பான முடிவுகள் பதிவாகியுள்ளன.

முதல் சுற்றின் மிகப்பெரிய அதிர்ச்சியாக உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சன் கிளாசிக்கல் ஆட்டத்தில் தோல்வியை தழுவினார். பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டரான அலிரேசா பிரூஸ்ஜா, கார்ல்சனை வீழ்த்தி முதல் சுற்றின் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தார். பிரக்ஞானந்தா மற்றும் வெஸ்லி சோ இடையோன கிளாசிக்கல் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதையடுத்து நடந்த அர்மகெடான் டைபிரேக்கரில் பிரக்ஞானந்தா சிறப்பாக விளையாடி வெஸ்லி சோவை வீழ்த்தினார்.

உலக சாம்பியனான குகேஷ் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை எதிர்கொண்டார். கிளாசிக்கல் ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் கெய்மர் வெற்றியை நோக்கி நகர்ந்த நிலையில் குகேஷ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை டிரா செய்தார், பின்னர் நடந்த அர்மகெடான் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய குகேஷ் வெற்றி பெற்றார்.

இந்தியாவின் திவ்யா தேஷ்முக் நடப்பு மகளிர் உலக சாம்பியனான ஜூவெஞ்சனை எதிர்கொண்டார். கடுமையான போராட்டத்திற்கு பன் கிளாசிக்கல் ஆட்டம் டிராவில் முடிந்தது. ஆனால் அர்மகெடான் டை பிரேக்கரில் திவ்யா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலக சாம்பியனான ஜூவெஞ்சனை வீழ்த்தி சாதனை படைத்தார்.

இந்தியாவின் முன்னணி வீராங்கனையான கேனேரு ஹம்பி கசகஸ்தானின் பிபிசாராவிடம் கிளாசிக்கல் ஆட்டத்தில் தோல்வியடைந்தார். மிடில் கேமில் கிடைத்த சாதகமான நிலையை சிறப்பாக பயன்படுத்திய பிபிசாரா ஹம்பியை வீழ்த்தி சாதித்தார்.

Tags : Praggnanandha ,Kukesh ,Oslo ,India ,Armageddon ,Norway Chess Series ,
× RELATED ஐபிஎல் 2026 குவாலிபையர் 1: குஜராத் அணியை...