×

சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் பி.வி.சிந்து, சிராக் ஷெட்டி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

 

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து, ஆண்கள் இரட்டையர் பிரிவில் சிராக் ஷெட்டி, சத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். சிங்கப்பூரில் நேற்று சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் போட்டிகள் துவங்கின. மகளிர் ஒற்றையர் பிரிவில் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து இந்தோனேசியாவை சேர்ந்த வர்தானியை 21-17, 21-18 என்ற நேர்செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் சிராக் ஷெட்டி, சத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி ஜோடி அமெரிக்காவை சேர்ந்த சென் ஜி யி, பிரேஸ்லி ஸ்மித் ஜோடியை 26-28, 21-15, 21-13 என்ற நேர்செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த அஸ்வினி பட், ஹிகா கவுதம் ஜோடி, சீன தைபேயின் சாங் சிங் ஹூய், யாங் சிங் டன் ஜோடியிடம் 16-21, 11-21 என்ற நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தனர்.

மற்றொரு மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த கவிபிரியா செல்வம், சிம்ரன் சிங்கி ஜோடி, ஸ்பெயினை சேர்ந்த லோப்ஸ், ரோட்ரிஸ் ஜோடியிடம் 21-18, 13-21, 5-21 என்ற நேர் செட் கணக்கில் வீழ்ந்தனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ஆயுஷ் செட்டி, கனடாவை சேர்ந்த விக்டர் லாயிடம் 21-11, 14-21, 12-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ஹரிகரன், அர்ஜூன் ஜோடி, ஜப்பானை சேர்ந்த ட்க்குரோ ஹோகி, யுகோ கோபயாஸி ஜோடியிடம் 15-21. 13-21 என்ற நேர்செட் கணக்கில் வீழ்ந்தனர். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ரோகன் கபூர், ஷிவானி காடே ஜோடி சீன தைவானை சேர்ந்த யங் போ ஹூசான் எச், ஹூ லிங்க் பேங்க் ஜோடியிடம் 18-21, 20-22 என்ற நேர் செட் கணக்கில் வீழ்ந்தனர்.

Tags : Singapore Open badminton ,PV ,Sindhu ,Chirag Shetty ,Singapore ,Satwiksairaj Rankireddy ,Singapore Open ,Singapore.… ,
× RELATED ஐபிஎல் 2026 குவாலிபையர் 1: குஜராத் அணியை...