இளைஞர்களுடன் தொடர்பில்லை கரப்பான் பூச்சி கட்சி சமூக ஊடக நாடகம்: ஏபிவிபி கருத்து

 

புவனேஸ்வர்: ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) தேசிய செயற்குழு கூட்டம் வரும் 29 முதல் 31ம் தேதி வரை நடக்க உள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் வீரேந்திர சிங் சோலங்கி ஒடிசாவின் புவனேஸ்வரில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்பது ஒரு சமூக ஊடக நாடகம். அக்கட்சிக்கு அடிமட்ட உறுப்பினர்கள் என யாரும் இல்லை. இணையத்தில் எழுந்த ஒரு குறிப்பிட்ட சூழலை பயன்படுத்தி ஆதாயம் தேடுவதற்காக அது உருவாக்கப்பட்டது. நாட்டின் இளைஞர்களுடன் அக்கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை ’’ என்றார்.

Related Stories: