×

மகளிர் பிரிவில் சொரானா அபாரம்

 

பிரெஞ்ச் ஓபன் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் முதல் சுற்றுப் போட்டியில் நேற்று, ரொமேனியா வீராங்கனை சொரானா கிறிஸ்டீ (36), பிரான்ஸ் வீராங்கனை க்ஸேனியா எப்ரெமோவா (17) உடன் மோதினார். துவக்கம் முதல் அநாயாசமாக ஆடி புள்ளிகளை குவித்த கிறிஸ்டீ, முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் அட்டகாசமாக ஆடிய அவர் 6-1 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார். இதன் மூலம், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய அவர் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Tags : Sorana ,French Open women's singles ,Sorana Cristi ,Ksenia Efremova ,Cristi ,
× RELATED கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி