×

கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி

 

கொல்கத்தா: ஐபிஎல் தொடரின் 70வது போட்டி, கொல்கத்தாவில் நேற்று, டெல்லி கேபிடல்ஸ் – கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் இடையே நடந்தது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து டெல்லி அணியின் துவக்க வீரர்களாக அபிஷேக் பொரெல், கே.எல்.ராகுல் களமிறங்கினர். இந்த இணை 40 ரன்கள் எடுத்த நிலையில், சவுரவ் தூபே வீசிய 5வது ஓவரில் பொரெல் (22 ரன்) ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த சாஹில் பராக் (24 ரன்), சுனில் நரைன் பந்தில் வீழ்ந்தார். துவக்க வீரராக களமிறங்கி சிறப்பாக ஆடி 30 பந்துகளில் 4 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் விளாசியிருந்த ராகுல், அனுகுல் ராய் வீசிய 13வது ஓவரில் அவுட்டானார். அதையடுத்து, கேப்டன் அக்சர் படேல், டேவிட் மில்லர் இணை சேர்ந்து ஆடினர்.

வருண் சக்ரவர்த்தி வீசிய 17வது ஓவரில் கேப்டன் அக்சர் (39 ரன்) விக்கெட்டை பறிகொடுத்தார். 20 ஓவர் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அசுதோஷ் சர்மா, 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதையடுத்து, களம் இறங்கிய கொல்கத்தா அணி 18.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 40 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது.

Tags : Delhi ,Kolkata ,IPL ,Delhi Capitals ,Kolkata Nitriders ,Abhishek ,
× RELATED சில்லி பாயிண்ட்