×

இஸ்லாமியர்களின் ஹஜ் பயணம் தொடங்கியது

 

மக்கா: இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றாக திகழும் ஆண்டு ஹஜ் யாத்திரை நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இருந்தும் யாத்ரீகர்கள் சவுதி அரேபியாவிற்கு வருகைத் தருவதற்கு தொடங்கி உள்ளனர். வெளிநாடுகளில் இருந்து சுமார் 15லட்சம் ஹஜ் பயணிகள் சவுதி அரேபியா விற்கு வருகை தந்துள்ளதாக ஹஜ் பாஸ்போர்ட் படை கமாண்டர் வெள்ளியன்று தெரிவித்தார்.

வழக்கமாக ஹஜ் யாத்திரையின் முதல் நாளில் மக்காவில் உள்ள பல யாத்ரீகர்கள் அருகில் உள்ள பாலைவன பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பரந்த கூடார முகாமில் ஒன்று கூடுவார்கள். முன்னதாக யாத்ரீகர்கள் புதிய பெரிய மசூதியில் அமைந்துள்ள காபாவைச் சுற்றி வலம் வந்தனர்.

Tags : Hajj ,Mecca ,Muslims ,Saudi Arabia ,
× RELATED ஷென்சோ-23 விண்கலம் மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி சீனா சாதனை…