×

ஈரான் அமைதி ஒப்பந்தம்: அதிபர் டிரம்புக்கு குடியரசு கட்சியினர் எதிர்ப்பு

 

வாஷிங்டன்: ஈரானுடனான அதிபர் டிரம்பின் அமைதி ஒப்பந்தமானது அவரது சொந்தக் கட்சியான குடியரசு கட்சியினரிடையே கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. ஈரான் -அமெரிக்கா, இஸ்ரேல் இடையே பிப்ரவரி மாத கடைசியில் போர் தொடங்கியது. இந்த போர் தொடங்கி 3 மாதங்கள் முடிவடைய உள்ளது. போரை நிரந்தரமாக நிறுத்தும் வகையில், ஈரானுடன் விரைவில் அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஈரானுடன் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அதிபர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அதிபர் டிரம்பின் அமைதி ஒப்பந்தத்துக்கு அவரது குடியரசு கட்சியினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இது குறித்து செனட் உறுப்பினர்கள், ஈரானுடனான அமைதி ஒப்பந்த நடவடிக்கையானது ராஜதந்திர தீர்வு தேவைப்படும் ஒரு ஆதிக்க சக்தியாக அங்கீகரிப்பதற்கு சமம் என்று கூறி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர். செனட் ஆயுத சேவைகள் குழுவின் தலைவர் ரோஜர் விக்கர், செனட்டர்கள் தாம் டில்லிஸ், லிண்ட்சே கிரஹாம், டெட் குரூஸ் உள்ளிட்டோர் அதிபரின் நடவடிக்கைக்கு தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர். மூன்று மாதமாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் இந்த அமைதி ஒப்பந்தத்தில் ஈரான் தனது வாக்குறுதிகளை கடைப்பிடிக்கும் என்று நம்புவது குறித்து குடியரசு கட்சியின் செனட்டர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனிடையே டிரம்பின் விமர்சகர்களில் ஒருவரான செனட்டர் ராண்ட் பால் பொறுமை காக்குமாறும், அமெரிக்காவே முதன்மையானது என்ற கொள்கையின் அடிப்படையில் ஒரு தீர்வை எட்டுவதற்க அதிபருக்கு போதுமான அவகாசம் அளிக்குமாறும் விமசகர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : Iran ,Republicans ,President Trump ,Washington ,Republican Party ,United States ,Israel ,
× RELATED ஷென்சோ-23 விண்கலம் மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி சீனா சாதனை…