தலைமை மருத்துவமனை இறுதி கட்ட பணிகள் தீவிரம்

ராசிபுரம், மே 25: ராசிபுரத்தில், ரூ.53.39 கோடி மதிப்பில் மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இதன் இறுதி கட்ட கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ராசிபுரம் அருகே, அனைப்பாளையம் பகுதியில் 6 தளங்களுடன் ரூ.53.39 கோடி மதிப்பீட்டில் பாத சிகிச்சை, எக்ஸ்-ரே, ஆய்வகம், ஸ்கேன் அறை, புற நோயாளிகள் பிரிவு, விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, முடவியல், கண், பல், காது, குழந்தை மருத்துவம், அவசர கால மகப்பேறு குழந்தை பராமரிப்பு, பிரசவ அறை, இருதய கண்காணிப்பு, ஆண், பெண் பொது மருத்துவம்,

பிரேத பிரிசோதனை கூடம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுடன், 250 படுக்கைகள் கொண்ட பல்வேறு சிறப்பு பிரிவுகளை உள்ளடக்கிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை புதிதாக கட்டப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் முகப்பு நுழைவாயில் வளைவான வடிவமைப்பின் கூடிய கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தில் நடந்து வருகிறது.  விரைவில் பணிகள் முடிந்த உடன் திறப்பு விழா குறித்து செயல்வடிவம் பெறும் எனவும் கூறப்படுகிறது.

 

Related Stories: