சென்னை: திருவாடனை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மருத்துவர் ராஜுவ், இவர் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சராக பதவியேற்றபின் நேற்று ராமநாதபுரம் வருகை தந்தார்.
அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர். தன்னை முதல்வர் ஜோசப் விஜய் அமைச்சரவையில் எனக்கு அமைச்சராக வாய்ப்பளித்துள்ளனர். சுற்றுலாத்துறை அமைச்சராக, அதற்கு நான் ரொம்ப கடமை பட்டிருக்கேன், பெரிய நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலா துறை பற்றி உங்களுக்கு (செய்தியாளர்களை பார்த்து) தெரியும். அருகில் இருந்தவர்கள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் என கூறியது பிறகு சுதாரித்துக் கொண்ட அமைச்சர் மீண்டும் போகலாமா? என கூறி சுற்றுச் சூழல் துறை அமைச்சர் என பேச தொடங்கினார்.
