- ஒடிசா
- அம்பத்தூர்
- அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர்
- மீனாக்ஷி நகர்
- Thirumullaivayal
அம்பத்தூர், மே 23: அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் திருமுல்லைவாயல் மீனாட்சி நகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் 8 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், அம்பத்தூர் கல்யாணபுரம் பகுதியைச் சேர்ந்த அருள் (எ) அருண்குமார் (23) என்பதும், இவர் ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா மொத்தமாக வாங்கி வந்து அம்பத்தூர், ஆவடி சுற்று வட்டார பகுதியில் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அருண்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
