×

மூச்சுத்திணறல் ஏற்பட்டு 4 மாத குழந்தை உயிரிழப்பு: போலீசார் விசாரணை

 

பெரம்பூர், மே 22: ஓட்டேரி பகுதியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 4 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். ஆந்திர மாநிலம் சிக்காகுளம் பகுதியை சேர்ந்தவர் சிரஞ்சீவி(30). இவர் கடந்த 14ம் தேதி ஓட்டேரி ஈடன் கார்டன் 4வது தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மனைவி மற்றும் நான்கு மாத குழந்தையுடன் வந்தார். நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் குழந்தையை குளிக்க வைத்து மாடியில் தூங்க வைத்துள்ளனர். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, குழந்தை அசைவின்றி இருந்துள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் ராஜேஸ்வரி சிரஞ்சீவி ஆகியோர் குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர்கள் கதறி அழுதனர். இதனிடையே தகவல் அறிந்து வந்த ஓட்டேரி காவல் நிலைய போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், குழந்தையின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பெற்றோர்கள் குழந்தையின் உடலை தங்களது சொந்த ஊரான ஆந்திராவிற்கு கொண்டு சென்று அங்கு அடக்கம் செய்ய உள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குழந்தையை குளிக்க வைத்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து ஓட்டேரி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Tags : PERAMPUR ,OTTERI ,Chiranjeevi ,Shikakulam ,AP ,Oteri Eden Garden ,
× RELATED 69 ஆண்டுகளில் முதல் முறையாக தேசிய...