×

பொதுமக்கள் தாக்கியதால் காயமடைந்தவர் மர்ம சாவு: கொலை வழக்கு பதிய கோரி மறியல்

 

மதுரை: மதுரை அவனியாபுரம், இம்மானுவேல் நகரை சேர்ந்தவர் லட்சுமணன்(50). மனநலம் பாதித்தவர் என்றும், 3 நாட்களுக்கு முன் வெள்ளக்கல் பகுதியில் ஒரு வீட்டில் திருட முயன்றதாகவும் கூறப்படுகிறது. அப்போது லட்சுமணனை, அப்பகுதி மக்கள் பிடித்து தாக்கியுள்ளனர். அவர் தப்பித்து ஓடியபோது, சுவரில் மோதி லட்சுமணனுக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து வெள்ளக்கல் பகுதி மக்கள் தாக்கியதால் தான் லட்சுமணன் உயிரிழந்ததாகவும், அவர்கள் மீது போலீசார் கொலை வழக்கு பதியக் கோரி உறவினர்கள் நேற்று மதுரை, கோரிப்பாளையம் பகுதியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், போலீசார் முறையாக வழக்குப்பதிவு செய்யும் வரை லட்சுமணனின் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Madurai ,Lakshmanan ,Emmanuel Nagar ,Avaniyapuram, Madurai ,Vellakkal ,
× RELATED 16 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!