×

16 இடங்களில் சதமடித்த வெயில்

 

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாளாக பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், நேற்று தமிழகத்தில் சென்னை, ஈரோடு, கரூர், காரைக்கால், மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பாளை யங்கோட்டை, பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருத்தணி, தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்ட 16 இடங்களில் சதமடித்தது. அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி வெயில் அடித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது.

Tags : Chennai ,Tamil Nadu ,Erode ,Karur ,Karaikal ,Madurai ,Nagapattinam ,Namakkal ,Palai Yangottai ,Parangipettai ,Puducherry ,Thanjavur ,Tiruchirappalli ,Tiruttani ,Thoothukudi ,
× RELATED 16 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!