- எம்.கே. ஸ்டாலின்
- சென்னை
- திமுக தலைவர்
- திமுக
- ஜனாதிபதி
- வி.கே.சி
- சட்டமன்ற உறுப்பினர்
- வன்னி அருசா
- ஐயுஎம்எல்ஏ
- ஷாஜகான்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களை பேச வேண்டாம் என்றும் தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். தமிழக அமைச்சர்களாக நேற்று பதவி ஏற்ற விசிக எம்எல்ஏ வன்னி அரசுக்கும், ஐயூஎம்எல்ஏ ஷாஜஹானுக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதோடு, அவர்கள் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றது குறித்து கடுஞ்சொற்களால் விமர்சிக்க வேண்டாம் என்று திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் வன்னி அரசுக்கும், ஷாஜஹானுக்கும் எனது வாழ்த்துகள். தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே திமுகவினர் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பது தான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
அண்ணா வழியிலும், கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
