×

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவராக கு.ப.கிருஷ்ணன் நியமனம்: முதல்வர் விஜய் உத்தரவு

 

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவராக கு.ப.கிருஷ்ணனை நியமனம் செய்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் முதல்வர் விஜய் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: ஏழை எளிய மக்களின் வாழ்விடங்களின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் குடியிருப்புகளை உருவாக்குதல், உறைவிடங்களில் மறுகுடியமர்வு செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக கு.ப.கிருஷ்ணன் நியமனம் செய்யப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : K.P. Krishnan ,Tamil Nadu Urban Habitat Development Board ,Chief Minister ,Vijay ,Chennai ,Tamil Nadu ,
× RELATED 16 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!