×

தவெகவா? தவாகவா? ஒண்ணுமே புரியல அமைச்சரவையில் இடம் கொடுத்த தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு நன்றி: விசிக தொண்டர்களின் காமெடி

 

விழுப்புரம்: தவெக அமைச்சரவையில் திண்டிவனம் தனி தொகுதி விசிக எம்எல்ஏ வன்னியரசு நேற்று அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனை வரவேற்று பல்வேறு இடங்களில் விசிகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்டவளாகம் எதிரே நகர விசிக சார்பில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

அப்போது அவர்கள் அமைச்சர் பதவி வழங்கிய தவாகவுக்கு (தமிழக வாழ்வுரிமைக்கட்சிக்கு) நன்றி என்று கூறி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த நிர்வாகி திடீரென்று சுதாரித்து தவெக (தமிழக வெற்றிக்கழகம்) என்று கூறும்படி சொல்லவே அதனை திருத்தி தவெக என்று கோஷமிட்டனர். தவெகவா?, தவாகவா ஒண்ணுமே புரியல அதான் நாங்கள் குழம்பிபோயிட்ேடாம் என்று விசிகவினர் தெரிவித்தனர்.

Tags : Thaveka ,Tamil Nadu Vazhuvrimai Party ,VSI ,Villupuram ,VSI MLA ,Tindivanam ,Vanniyarasu ,Villupuram Collector ,Perundittavalakam ,VSI… ,
× RELATED தவெக வேட்பாளரை தாக்கியதாக புகார்:...