×

மாட்டிக்கினாரு, மாட்டிக்கினாரு ஒருத்தரு…. கத்தை, கத்தையாக பணத்தை எண்ணும் தவெக வேட்பாளர்: தேர்தல் பிரசாரத்துக்கு போக மாட்டேன் பாடலுடன் வீடியோ வைரல்

 

விழுப்புரம்: விழுப்புரம் தவெக மாவட்ட செயலாளர் கட்டை பையில் கத்தை கத்தையாக தேர்தலுக்கு பணம் வாங்கியதாகவும், அவர் முன்பாக இந்த பணத்தை எண்ணுவதுபோல் வீடியோ ஒன்று வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தவெக நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் அட்ராசிட்டியிலும், அரசு அலுவலகங்களில் அத்துமீறலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப் பதவிகளுக்கு பேரம் பேசி பணத்தை வசூலிப்பதாக தவெக மாவட்ட செயலாளர் குஷிமோகன் மீது புகார்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் தவெக மாவட்ட செயலாளர் குஷிமோகன் முன்பு ஒரு கட்டை பையில் கத்தை, கத்தையாக பணம் எண்ணும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சோபாவில் தவெக மாவட்ட செயலாளர் குஷிமோகன் உட்கார்ந்திருப்பது, அவருக்கு முன்னால் ஒரு கட்டைப்பையில் கத்தை, கத்தையாக 500 ரூபாய் நோட்டு பண்டல்கள் அடுக்கிவைத்து எண்ணப்பட்டு வருகின்றன. இந்த வீடியோவிற்கு மாட்டிக்கினாரு, மாட்டிக்கினாரு ஒருத்தரு என்று பாடலை போட்டும், ரூ.50 லட்சம், ரூ.20 லட்சம் வசூல் என்று பதிவிடப்பட்டு சமூகவலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

இதுகுறித்து தவெக வட்டாரத்தில் கூறுகையில், ‘‘நடந்து முடிந்த தேர்தலில் விழுப்புரம் ெதாகுதியில் போட்டியிட்ட குஷிமோகன் பிரசாரம் எதுவும் செய்யாமல் மற்ற வேட்பாளர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு ஒதுங்கிவிட்டார். அப்போது பெற்ற பணத்தை உடனிருந்தவர்களே வீடியோ எடுத்து தற்போது ைவரலாக்கி வருகிறார்கள்’’ என்றனர். சமீபத்தில் விழுப்புரம் அம்மா உணவகத்தில் அத்துமீறி ஆய்வு என்ற பெயரில் அடாவடி செய்ததாகவும், நகராட்சி ஆணையருக்கு உத்தரவு போட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தோற்றாலும் நான்தாம்பா எம்எல்ஏ என்பதைபோல் தவெக மாவட்ட செயலாளர் அலப்பறை செய்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது தேர்தலின்போது கத்தை, கத்தையாக பணம்பெற்ற வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags : Thaveka ,Villupuram ,Tamil Nadu ,
× RELATED தவெக வேட்பாளரை தாக்கியதாக புகார்:...