×

கட்டிட வேலையில் மண்ணில் புதைந்து 2 பெண்கள் சாவு: மதுரை அருகே பரிதாபம்

 

மதுரை: மதுரை அருகே கட்டிட வேலையின்போது மண் சரிந்து 2 பெண்கள் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம், சிலைமான் அருகே புளியங்குளத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் விரகனூர் அருகே திருமண மண்டபம் கட்டி வருகிறார். இதற்கான கட்டுமானப் பணிகள் கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது. நேற்று 4 பெண்கள் உள்பட 10 தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர். திருமண மண்டபத்திற்கான அஸ்திவார பள்ளத்தில், கான்கிரீட் அமைப்பதற்காக கம்பி கட்டி அதை பள்ளத்திற்குள் இறக்கி வைக்கும் பணிகள் நடந்து வந்தது.

மதிய உணவு இடைவேளை முடிந்து அனைவரும் மீண்டும் வந்து வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த அஸ்திவார பள்ளத்தில் புளியங்குளத்தை சேர்ந்த தமிழரசி (60), மணலூரை சேர்ந்த தனலட்சுமி (46) ஆகியோர் வேலை செய்துள்ளனர். பள்ளம் தோண்டிய மண், மேற்பரப்பில் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த மண் திடீரென சரிந்து அப்படியே பள்ளத்திற்குள் விழுந்தது. இதில் மண்ணில் புதைந்து தமிழரசி, தனலட்சுமி இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து சிலைமான் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Madurai ,Thangaraj ,Puliyankulam ,Silaiman ,Madurai district ,Viraganur ,
× RELATED தவெக வேட்பாளரை தாக்கியதாக புகார்:...