மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் மெரினா கடற்கரையில் பலாத்காரம்: இன்ஸ்டா காதலன் கைது: மேலும் 2 பேருக்கு போலீஸ் வலை

 

சென்னை: சென்னையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை தனியாக வரவைழத்து மெரினா கடற்கரைக்கு அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த இன்ஸ்டா காதலனை போலீசார் கைது செய்தனர். மேலும், செல்போனுடன் தலைமறைவான 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்தவர் ராணி (19), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவருக்கு அவரது பெற்றோர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அதேநேரம் ராணி எப்போதும் செல்போனில் மூழ்கி கிடப்பார். அந்த வகையில் திடீரென ராணி வீட்டில் இருந்து 13ம் தேதி மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் வயதுக்கு வந்த மகளை காணவில்லை என்று உறவினர்கள் வீடு மற்றும் பல இடங்களில் தேடி வந்தனர். மாயமான மகளை கண்டுபிடித்து தரும்படி காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 19ம் தேதி மாம்பலம் ரயில் நிலையத்தில் ராணி சுற்றியதை பார்த்து அவரது பெற்றோர் மீட்டனர். அப்போது ராணியின் உடலில் சந்தேகத்திற்கு இடமான வகையில் காயங்கள் இருந்ததால், சந்தேகமடைந்து அவரது பெற்றோர் திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது டாக்டர்கள் ராணியை பரிசோதனை செய்த போது, அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. உடனே டாக்டர்கள் பரிந்துரைப்படி ராணியின் பெற்றோர் மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்படி, மகளிர் போலீசார் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர். மேலும், ராணி பயன்படுத்திய செல்போன் தொடர்புகள் குறித்தும் விசாரணை நடத்திய போது, பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: மேற்கு மாம்பலத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ராணிக்கு இன்ஸ்டாகிராமில் அதிக ஆண்கள் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். அவர்களிடம் ராணி இன்ஸ்டா மெசேஞ்ஜரில் ஆபாசமாக பேசி வந்ததும் தெரியவந்தது.

அதன்படி கடந்த 13ம் தேதி இன்ஸ்டா காதலன் ஆலோசனைப்படி ராணி வீட்டில் இருந்து வெளியே வந்தது உறுதியானது. பிறகு ராணி இன்ஸ்டா காதலன் கூறியபடி எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கம் அருகே வந்துள்ளார். பிறகு இன்ஸ்டா காதலனான சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த இம்ரான் (30) என்பவர் பைக்கில் வந்து ராணியை மெரினா கடற்கரைக்கு அழைத்து சென்று இம்ரான், ராணிக்கு பிரியாணி, ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துள்ளார்.

பிறகு நள்ளிரவு நேரத்தில் மெரினா கடற்கரையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் மெரினாவில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளம் அருகே மறைவாக ராணியை இம்ரான் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் மறுநாள் 14ம் தேதி அதிகாலை இம்ரான் கையில் செலவுக்கு ரூ.500 பணம் கொடுத்து கோட்டை ரயில் நிலையத்தில் விட்டு மாம்பலம் செல்லும் ரயிலில் வீட்டிற்கு செல்லும் படி கூறி அவர் சென்றுவிட்டார்.

அதன்படி ரயில் மூலம் மாம்பலம் ரயில் நிலையத்திற்கு ராணி வந்து இறங்கினார். இரவு முழுவதும் வீட்டிற்கு செல்லாததால் அவரது பெற்றோருக்கு பயந்து ரயில் நிலையத்தில் உள்ள ஆட்டோ டிரைவர் ஒருவரிடம் ஏதாவது வேலை கிடைக்குமா என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் தெரிந்தவர்கள் உதவியுடன் தி.நகரில் உள்ள பிரபல துணிக்கடையில் ராணியை வேலைக்கு சேர்த்துள்ளார். வேலைக்கு சேர்ந்த உடன் வீட்டிற்கு செல்லாமல், துணி கடையில் சக பெண் ஊழியர்கள் தங்கியுள்ள அறையில் தங்கி 2 நாட்கள் வேலை செய்துள்ளார்.

பின்னர் இன்ஸ்டா நண்பர்கள் அழைத்ததின் பெயரில், ராணி நண்பர்களை தேடி கடந்த 16ம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் கோவை சென்றுள்ளார். பிறகு மீண்டும் கோவையில் இருந்து திருப்பூர், காட்பாடி, வேலூர் வந்து கடைசியாக அரக்கோணம் வந்துள்ளார்.
ஒரு வழியாக அரக்கோணத்தில் உள்ள இன்ஸ்டா நண்பர்கள் 2 பேரை ராணி சந்தித்துள்ளார்.

அவர்கள் ராணியை ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்று 2 பேரும் ராணியுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது ராணி உடல் நிலை மிகவும் பலவீனமாகியுள்ளார். இதை பார்த்த அவரது இன்ஸ்டா நண்பர்கள் 2 பேர், பயத்தில் ராணியின் செல்போனை எடுத்துக்கொண்டு செலவுக்கு பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். நண்பர்களை நம்பி வந்த ராணிக்கு என்ன செய்வது என்று தெரியாமல், செல்போனை பறிகொடுத்து யாரிடமும் உதவி கேட்க முடியாமல் மீண்டும் ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் வந்து, மாம்பலம் ரயில் நிலையத்தில் கடந்த 19ம் ேததி உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்திருந்தது தெரியவந்தது.

தனக்கு என்ன நடந்தது என்று கூட ராணிக்கு சரியாக தெரியவில்லை. அவர் இன்ஸ்டாவில் தனது முழு கவனத்தை செலுத்தியதால் கடுமையாக மனநிலை பாதிக்கப்பட்டு, அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்று இன்ஸ்டாகிராமையே அவர் பயன்படுத்தி தெரிந்து கொள்ளும் நிலையில் இருந்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ராணியை ஏமாற்றி பலாத்காரம் ெசய்த இடம் மெரினா கடற்கரை திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் எல்லையில் இருப்பதால், மாம்பலம் அனைத்து மகளிர் போலீசார் இந்த பலாத்காரம் வழக்கை திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர். அதைதொடர்ந்து ராணியின் செல்போன் சிக்னல் உதவியுடன் கடந்த 13ம் தேதி எழும்பூரில் சந்தித்த இம்ரான் என்பவரை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதைதொடர்ந்து மகளிர் போலீசார் இம்ரானை கைது செய்தனர்.

மேலும், இந்த வழக்கில் ராணியை அரக்கோணம் அழைத்து கூட்டு பலத்காரம் செய்த 2 இன்ஸ்டா நண்பர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். தொடர் பாலியல் பலாத்காரத்தால் ராணி உடல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை இன்ஸ்டா காதலர்கள் தனித்தனியாக அழைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: