×

கோவையில் அண்ணாமலை ஆதரவாளர்கள் பரபரப்பு போஸ்டர்

 

கோவை: கோவை பாஜ தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள், மாநில அணி தலைவர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுடனான மையக்குழு கூட்டம் நடந்தது. இதில், சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருக்கும் பாஜ முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. இந்நிலையில், கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள், அவரது புகைப்படத்துடன் ஒட்டிய போஸ்டரில் “பயமறியாதவர்களுக்கு எல்லையே கிடையாது” என்கிற வாசகம் இடம் பெற்றுள்ளது. ஆர்மி ஆப் தீரன் அண்ணாமலை என்று இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Tags : Annamalai ,Goa ,Goa Baja ,Baja ,US ,
× RELATED கேரள சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை...