சென்னை: சொல்லாமல் திமுகவை விட்டுச் சென்று தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது காங்கிரஸ் செய்த துரோகம் என அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் ‘திமுகவை விட்டுச் சென்றவர்கள் பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. திமுகவுக்கு இது எல்லாம் புதிதல்ல. தமிழ்நாட்டில் முதல்முறையாக ஒரு அணியில் வெற்றி பெற்று மற்றொரு அணியில் சேர்ந்துள்ளார்கள்’ எனவும் தெரிவித்துள்ளார்.
