சென்னை: திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு இதயம் நிறைந்த நன்றி என சிந்தனைச் செல்வன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவரின் பதிவில்; “5 ஆண்டுகாலம் எமது கோரிக்கைகளை ஏற்று அரசாணைகளாக மாற்றிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. தேர்தல் தோல்வியின்போது கூட கலங்காத என் மனம் இதை எழுதும்போது நன்றியால் கரைகிறது. நன்றியை பதிவு செய்வது என் அரசியல் வாழ்வின் குறைந்தபட்ச அறம் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
