×

ஒன்றிய பாஜக அரசை விஜய் பகைக்கமாட்டார்: நடிகை கஸ்தூரி சொல்கிறார்

கோவை: ஒன்றிய அரசை முதல்வர் பகைத்துக்கொள்ள மாட்டார் என நடிகை கஸ்தூரி கூறினார்.

கோவை விமான நிலையத்தில் நடிகை கஸ்தூரி நிருபர்களிடம் கூறியதாவது;
டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது நல்ல விஷயம். குடிபோதையில் இருப்பவர்கள் தெருக்களையே பார்களாக மாற்றி உள்ளனர். ஆட்சி மாறலாம். காட்சி மாறுவதற்கு நேரமாகும். பலர் புதிய எம்எல்ஏக்கள் அவர்கள் விரைவில் கற்றுக்கொள்வார்கள். ஒன்றிய அரசை எதிர்த்து முதலமைச்சர் விஜய் அரசியல் செய்வார் என்று நினைக்கவில்லை. காங்கிரசை நம்பி தனது ஆட்சியில் இருக்கும்போது அவருக்கு என்ன கொள்கை இருக்க முடியும். விஜய் பாஜவுடன் இணக்கமாக செல்வது நல்லது. ஒன்றிய அரசை விஜய் பகைத்து கொள்ள மாட்டார் என நினைக்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Union BJP government ,Kasturi ,KOWAI ,MUSK ,EU GOVERNMENT ,Goa airport ,Tasmak ,
× RELATED கேரள சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை...