வரும் 23ம் தேதி வரை மழை: திருத்தணி, சென்னையில் 104 டிகிரி வெயில்

 

சென்னை: தமிழகத்தில் திருத்தணி, சென்னை மாவட்டங்களில் நேற்று 104 டிகிரி வெயில் கொளுத்தியது. அதே நேரத்தில் பல இடங்களில் மழையும் பெய்துள்ளது. இதையடுத்து, 23ம் தேதி வரையில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்ைன வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தெற்கு கடலோரத்தில் ஆந்திரா வரையில் நீடித்துள்ள வளி மண்டல காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று அனேக இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 163 மிமீ மழை பதிவாகியுள்ளது. வெப்பநிலையை பொருத்தவரையில் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 3-4 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை உயர்ந்தும் பிற இடங்களில் வெப்பநிலையில் மாற்றம் ஏதும் இல்லை.

இருப்பினும், திருத்தணி, சென்னை மாவட்டங்களில் நேற்று 104 டி்கிரி வெயில் கொளுத்தியது. வேலூர் 102 டிகிரி, மதுரை, ஈரோடு, திருச்சி 100 டிகிரி வெயில் நிலவியது. இந்நிலையில், வளி மண்டலத்தில் சுமார் 1.5 கிமீ உயரத்தில், கிழக்கு உத்ர பிரேதசம் முதல் லட்சத்தீவு வைரயும், மத்திய மகாராஷ்ட்ரா, மரத்வாடா, உள் கர்நாடகம், கேரளம் வ ழியாக ஒரு வளி மண்டல காற்றழுத்த தாழ்வுப்பாதையும், சுமார் 3.1 கிமீ முதல் 5.8 கிமீ உயரத்தில் தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சியும் நிலை ெகாண்டுள்ளது.

அதேபோல, தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவுப் பகுதிகளில் இருந்து தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் வரை கேரளா, தெற்கு உள் கர்நாடகம் மற்றும் ராயலசீமா வழியாக ஒரு வளி மண்டல காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலை கொண்டுள்ளது. நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்்கள் மற்றும் வட உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி மின்னலுடன் இன்றும் மழை பெய்யும்.

மேலும், 21ம் தேதியில், நீலகிரி, கோவை, தேனி, ஈ ரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். இதே நிலை 23ம் தேதி வரை நீடிக்கும். வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் இருக்காது. இந்நிலையில், சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும். வெப்பநிலை 102 டிகிரி வரை இருக்கும்.

Related Stories: