சென்னை: தமிழ்நாட்டில் 75 அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.80.64 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வகுப்பறை, ஆய்வகம், குடிநீர் வசதி, கழிவறை, சுற்றுச்சூழல் உள்ளிட்டவைகளை மேம்படுத்த ரூ.80.64 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நபார்டு வங்கி நிதியுதவியுடன் அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை தமிழ்நாடு அரசு மேம்படுத்துகிறது.
