சென்னை: SBI வங்கியில் ரூ.300 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் பைனான்சியர் குல்னஸ் பேகம் வீடு உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அண்ணா நகரில் லஷ்மணசாமி என்பவரது வீடு, அவரது மைத்துனர் கிருஷ்ணமூர்த்தி வீடு உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
