விஜய் ஜோதிடருக்கு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

 

சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் ஆர்.அப்துல் கரீம் கூறியிருப்பதாவது: தவெக விஜய் முதல்வராக பொறுப்பேற்ற ஒரு சில நாட்களில் ஐஏஎஸ் அதிகாரிக்கு நிகரான ஓஎஸ்டி பதவியில் தன்னுடைய ஜோதிடர் ராதன் பண்டிட் என்பவரை நியமித்தது பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில் அவருடைய நியமனத்தை வாபஸ் பெற்றது வரவேற்பிற்குரியது. அதே நேரத்தில் இந்நியமனத்தை எதிர்த்து பாஜ தவிர்த்து பெரும்பான்மையான அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்துச் சொன்ன சூழலில் அதில் சிலவற்றை எடுத்து அதை இந்து, முஸ்லிம் பிரச்னையைப்போன்று திரித்து ஆர்எஸ்எஸ் பாணியில் இந்த ஜோதிடர் பேசியுள்ளார்.

இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜோதிடத்தால் இஸ்லாமியர்களும் பாதிக்கப்படுகிறார்கள் எனும் காரணத்தை மனதில் கொண்டு அவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த ஜோதிடரின் சவாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்றுக்கொள்கிறது. மற்ற மதத்தினரின் நம்பிக்கையை மதிக்கும் அதே நேரத்தில் விஷமத்தனமாக நடக்கும் ரிக்கி ராதன் பண்டிட் என்பவரின் வாதங்களை பொய்யென நிரூபிப்பது காலத்தின் தேவை.

Related Stories: