108 அவசர ஆம்புலன்ஸ் 2500 ஆக உயர்த்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

 

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆண்டில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தாய்மார்கள் 108 அவசர ஊர்தி மூலம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களில் 1500க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனைகளுக்கு செல்லும் வழியில் அவசர ஊர்தியிலேயே மகப்பேறு நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024-25ம் ஆண்டில் இதேபோல் 1888 குழந்தைகள் அவசர ஊர்திகளில் பிறந்திருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் 500 குழந்தைகளில் ஒன்று அவசர ஊர்தியில் பிறக்கின்றன என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் தற்போது அடிப்படை வசதி கொண்ட அவசரகால ஊர்திகள் -977, மேம்படுத்தப்பட்ட அவசரகால ஊர்திகள்- 307, பச்சிளங்குழந்தைகளுக்கான ஊர்திகள்- 65, பிற சேவைகளுக்கானவை – 4 என மொத்தம் அவசரகால ஊர்திகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த எண்ணிக்கை 2500 ஆக உயர்த்தப்பட்டால் தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த சேவை இன்னும் சிறப்பாக கிடைக்கும். எனவே 108 அவசர ஊர்திகளின் எண்ணிக்கையை 2500 ஆக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: