சென்னை: தமிழக அரசு நிர்வாகத்தை மேலும் வேகப்படுத்த, பல்வேறு முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி; ககன்தீப் சிங் பேடி, பி. அமுதா, சத்யபிரதா சாகு, ஷுன்சோங்காம் ஜடக் சிரு, அனில் மேஷ்ராம், எம். வள்ளலார், கே.எஸ். பழனிசாமி, வி. தட்சிணாமூர்த்தி, சஜ்ஜன்சிங் ஆர். சவான், பிரசாந்த் எம். வட்னேரே, ஜி.கே. அருண் சுந்தர் தயாளன் மற்றும் ஜி. லட்சுமிபதி ஆகியோருக்குப் பணி மாறுதல்களும் புதிய நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், முக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வாரியங்களின் நிர்வாகப் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில் சில அதிகாரிகள் குறிப்பிட்ட துறைகளின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, டி. ஆனந்த் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் வசமும், ஏ.ஆர். ராகுல் நாத் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், ஜி.எஸ். சமீரன் பெருநகர சென்னை மாநகராட்சியின் வசமும், எம். ஆர்த்தி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வசமும், தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வசமும் ஒப்படைக்கப்பட்டு அதற்கான அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
