செய்யூர் பஜார் பகுதியில் ஆர்ஓ குடிநீர் திட்டம் கொண்டு வர கோரிக்கை

செய்யூர், மே 18: செய்யூர் பஜார் பகுதியில், ஆர்ஓ குடிநீர் திட்டம் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூரின் மையப்பகுதியாக உள்ள பஜார் பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக கூடுகின்றனர். ஆனால், இங்கு பொது குடிநீர் திட்டம் ஏதும் உருவாக்கப்படவில்லை. இதனால், இப்பகுதியில் கூடும் பொதுமக்கள் இலவச குடிநீர் கிடைக்காமல் பணம் கொடுத்து கடைகளில் வாங்கி பருக வேண்டிய நிலை உள்ளது.

இங்குள்ள மையப்பகுதியில் ஆர்ஓ குடிநீர் திட்டம் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, பொதுமக்கள் குடிநீர் தாகத்தை போக்க இங்குள்ள மையப்பகுதியில் இலவச ஆர்ஓ குடிநீர் திட்டத்தை கொண்டு வர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 

Related Stories: