10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு இடுக்கியில் 99.28% பேர் தேர்ச்சி

மூணாறு, மே 16: கேரளா மாநிலத்தில் நேற்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் இடுக்கி மாவட்டத்தில் பொதுத்தேர்வில் 99.28 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தனர். மாவட்டத்தில் இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 5,486 மாணவர்கள், 5,151 மாணவிகள் என மொத்தம் 10,637 பேர் எழுதினர்.

இவர்களில் 5,442 மாணவர்கள், 5,118 மாணவிகள் உட்பட மொத்தம் 10,560 பேர் மேல் படிப்பிற்கு தகுதி பெற்றுள்ளனர். தொடுபுழா கல்வி மாவட்டத்தின் கீழ் 99.29 சதவீதம் பேர், கட்டப்பனை கல்வி மாவட்டத்தின் கீழ் 99.27 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

Related Stories: