காங்கோவில் எபோலா வைரஸ் பரவல்: 65 பேர் பலி

கின்ஹாசா: ஆப்பிரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் காங்கோவில் எபோலா வைரஸ் பரவி உள்ளதாக உறுதி செய்துள்ளது. காங்கோவில் உள்ள இடுரி மாகாணத்தில் எபோலா வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. உயர்மட்ட பொது சுகாதார அமைப்பான ஆப்பிரிக்கா நோய்க் கட்டுப்பாட்டு மையம் எபோலா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது.

முக்கியமாக மோங்வாலு மற்றும் ருவாம்பாரா சுகாதார மண்டலங்களில் எபோலா வைரஸ் இறப்புக்களும், பாதிப்புக்களும் பதிவாகி உள்ளதாக ஆப்பிரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மொத்தம் 246 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. மேலும் 65 பேர் உயிரிழந்ததும் பதிவாகி உள்ளது.

Related Stories: