10.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு இறுதி ஒப்புதல் வன்னியர்கள் வாழ்வில் இனி வசந்த காலம் தலைவர்களுக்கு ராமதாஸ் நன்றி

விழுப்புரம், மார்ச் 2: பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி தொண்டர்களுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை வென்றெடுப்பதற்காக கடந்த 40 ஆண்டுகளுக்கும்மேலாக நாம் போராடி வருகிறோம். பரபரப்பான நிமிடங்களுக்குப் பிறகு கடந்த 26ம் தேதி பிற்பகலில் வன்னியர் இடப்பங்கீட்டு சட்டமுன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.   தமிழக சட்டப் பேரவையில் சட்டம் இயற்றப்பட்ட நாளிலேயே வன்னியர் இடப்பங்கீட்டு சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளித்தது மட்டுமின்றி, அதே நாளிலேயே அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இதன்மூலம் இரண்டரை கோடி வன்னியர்களின் உள்ளங்கள் குளிர்ந்தன. அனைவரும் மகிழ்ச்சிப் பெருங்கடலில் மூழ்கினார்கள். வன்னிய மக்களின் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி நாம் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவளித்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தேவர் பேரவைத் தலைவர் சேதுராமன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்ட தலைவர்களுக்கும், ஏராளமான அமைப்புகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories:

>